அமேசான் பிரைமில் முன்னணி தமிழ் நடிகரின் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Mahaan Release in Amazon Prime : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன், கோப்ரா மற்றும் மகான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு; மற்றும் வெள்ளி, சனியில் கோவிலுக்கு செல்லத் தடை..

கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

படத்துக்கு செம Response – வெட்கப்பட்டு பேசிய Hip hop Tamizha Adhi | Anbarivu Special Show | HD

விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகளில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

படத்துக்கு செம Response – வெட்கப்பட்டு பேசிய Hip hop Tamizha Adhi | Anbarivu Special Show | HD

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.