கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான மகன் படம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Mahaan Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய மகன் துருவ் விக்ரம் மட்டுமல்லாமல் பாபி சிம்மா சிம்ரன் என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் மகான்.

படத்தின் கதைக்களம் : சுதந்திரப் போராட்ட குடும்பத்தில் பிறக்கும் விக்ரமுக்கு காந்திமகான் என பெயர் சூட்டுகிறார் அவருடைய அப்பா. காந்தி மகான் என்று பெயர் வைத்திருப்பதால் இப்படித்தான் வாழவேண்டும் அப்படித்தான் வாழனும் என பல்வேறு கட்டுப்பாடுகளோடு வாழச் சொல்லித் தருகிறார். இந்த கட்டுப்பாடுகளால் சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்து வருவதாக எண்ணுகிறார் விக்ரம். ஒருகட்டத்தில் இவரும் இவருடைய நண்பர் பாபி சிம்ஹாவும் மது விற்பனை செய்ய தொடங்கி தமிழ்நாடு முழுக்க ஆதிக்கத்தை செலுத்தும் அளவிற்கு வளர்கின்றனர்.

இந்தப் பக்கம் அம்மாவின் வளர்ப்பால் ஐபிஎஸ் அதிகாரியாக உயர்கிறார் துருவ் விக்ரம். மது உற்பத்தி செய்து விற்பனை செய்யும் காந்தி மகானுக்கும் அவருடைய மகனுக்கும் இடையே நடக்கும் போர் தான் படத்தின் கதை களம்.

1960, 1996, 2003 மற்றும் 2016 என நான்கு விதமான காலகட்டங்களில் நடக்கும் கதையாக மகான் திரைப்படம் உருவாக்கியுள்ளது. சியான் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில திரைப்படங்களில் விக்ரம் கெட்டப் எல்லாம் நல்லா இருக்கு ஆனால் நடிப்பில் மாற்றமில்லை என சொல்லியவர்களை நடிப்புல மிரட்டி விட்டார் என இந்த படம் மூலம் பேச வைக்கிறார்.

முதல் பாதி முழுக்கவும் விக்ரம் மற்றும் பாதி சினிமா எப்படி மது வியாபாரத்தில் உச்சம் கொடுக்கிறார்கள் காட்டப்படுகிறது. இரண்டாம்பாதியில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இடையேயான காட்சிகள் நம்மை வெகுவாக கவர்கின்றன. அப்பாவா மகனா என போட்டி போட்டுக்கொண்டு நடிப்பை கொடுத்து படத்தை மெருகேற்றி விட்டனர். சிம்ரனும் அவரது பங்குக்கு திறம்பட நடித்து கொடுத்துள்ளார். ஆனால் துருவ் விக்ரமுக்கு இளம் வயது என்பதால் அவருக்கு ஐபிஎஸ் அதிகாரி கெட்டப் பெரிய அளவில் பொருந்தவில்லை.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்க்கு பெரிய பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஒளிப்பதிவில் தன்னுடைய முயற்சியால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. எடிட்டிங் கனகச்சிதம்.

இறுதியாக வெளியான ஜகமே தந்திரம் படத்தில் கோட்டை விட்டதை மகன் படத்தின் மூலம் மீட்டு எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். நேர்த்தியான திரைக்கதையால் நம்மை கட்டிப் போடுகிறார். மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை அழகாக படம் முழுவதும் சொல்லியுள்ளார் இயக்குனர்.

தம்ப்ஸ் அப் :

1. விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரின் நடிப்பு.

2. ஒளிப்பதிவு

3. சண்டைக்காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. பாடல்கள் கவரவில்லை

2. முதல்பாதியில் வேகத்தை கூட்டியிருக்கலாம்.

REVIEW OVERVIEW
மகான் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
mahaan-movie-reviewமொத்தத்தில் மகான் விக்ரம், துருவ் விக்ரம் என இருவருக்குமான ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்.