Mahaan Movie Release in OTT

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Mahaan Movie Release in OTT : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம், கோப்ரா, மகான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

மகான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சியான் விக்ரம் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மகான் திரைப்படத்தை படக்குழு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகான் திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே எதிர்பார்ப்பதாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று படக்குழு முடிவை மாற்றிக்கொள்ளுமா? அல்லது OTT ரிலீஸ் அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம Jolly ஆக கலாய்த்த Karu Pazhaniappan – மேடையில் விழுந்து விழுந்து சிரித்த MP.Kanimozhi