Mahaan Movie Release Date Announcement

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahaan Movie Release Date Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான். லலித் குமார் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரானா வைரஸ் பேரிடர் காரணமாக இந்தப் படம் நேரடியாக OTT-ல் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.

நாம அதை பத்தி பேசுவதே இல்ல – Interview With Putham Pudhu Kaalai Vidiyadhaa Movie Team

விராட்கோலி திருமணம் செய்திருக்கக் கூடாது : சோயிப் அக்தர் ஆதங்கம்

இப்படியான நிலையில் தற்போது மகான் திரைப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவும் மகனும் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.