Mahaan Clash With Valimai on Pongal

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வலிமை படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முன்னணி நடிகரின் படம் ஒன்று பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Mahaan Clash With Valimai on Pongal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்துடன் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

நவகிரக தோஷங்களுக்கு, எளிய பரிகாரங்கள்

ஆனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதிதான் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதனால் வலிமை திரைப்படம் சோலோவாக வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்துடன் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் மனதை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Blue Sattai Maran-யை கை எடுத்து வணங்கிய Bharathi Raja – Anti Indian Stars Review | Seeman, Cheran

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.