சிம்பு நடித்துள்ள மஹா திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Mahaa Release in OTT : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

OTT-யில் வெளியாகும் சிம்புவின் திரைப்படம் - விறுவிறுப்பாக நடக்கும் பேச்சுவார்த்தை

இத்திரைப்படம் மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு அவருடைய முன்னாள் காதலி ஹன்சிகா நடித்துள்ள மகா என்ற படத்திலும் நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அப்போதே கூடியது. மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நீண்ட நேரம் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.

தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இந்த படத்தினை நேரடியாக OTT-ல் இதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியுள்ளது. படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் அதிக விலைக்கு விற்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.