மஹா படத்தின் ரிலீஸ் குறித்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் படத்தின் இயக்குனர்.

Mahaa Movie Release Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது சோலோ நாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மகா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு நீண்ட நேரம் இடம்பெறும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மஹா படத்தின் ரிலீஸ்.. நீதிமன்றத்தை நாடிய படத்தின் இயக்குனர்.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு புதிய கண்கள் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக படத்தினை நேரடியாக ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் தனக்கு உடன்பாடு இல்லாததால் இந்த படத்தின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் படத்தில் சில காட்சிகளை ஏனோதானோ என சேர்த்து இருப்பதாகவும் எனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த படத்தை வெளியிடக் கூடாது என தடை வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.