storm

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.

அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மஹா என பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த புயல் தீவிர புயலாக மாறும் எனவும், இதன் மூலம் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலையில் மஹா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. எனவே, இப்புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.

ஆனால், மஹா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.