Hanshika Poster

Hanshika Poster : ரத்தத்தில் குளிக்கும் ஹன்ஷிகாவின் பட போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. இவர் தற்போது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகின்றன. முதலில் காவி உடையில் சுருட்டு புகைப்பது போல போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து முஸ்லீம் வேடத்தில் பிரேயர் செய்வது போலவும் அதன் பின் புறத்தில் நிழலில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொள்வது போலவும் போஸ்டர் வெளியானது.

இந்த இரண்டு போஸ்டர்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஹன்ஷிகா நீருக்கு பதிலாக ரத்தத்தில் குளிப்பது போல உள்ளது.

இதனால் இந்த மகா படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.