விஜய் படங்களை பார்க்காமல் புறக்கணியுங்கள் என பிரபல சாமியார் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் படங்களை பார்க்காமல் புறக்கணியுங்கள்.. பிரபல சாமியாரின் பேச்சால் வெடித்த பிரச்சனை

சமீபகாலமாகவே விஜய் தன்னுடைய படங்களை தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார். அதேபோல் அரசியல் வசனங்களை பேசி வருகிறார். இது நிலையில் மதுரை ஆதீனம் சமீபத்தில் நடந்த இந்துக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது இன்றைய கோவில்களின் நிலை திமுக அரசு செய்யும் வேலைகள் குறித்து பேசினார்.

விஜய் படங்களை பார்க்காமல் புறக்கணியுங்கள்.. பிரபல சாமியாரின் பேச்சால் வெடித்த பிரச்சனை

அப்போது விஜய் படங்களில் இந்துக்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார். ஆகையால் அவருடைய படங்களை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என பேசி உள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.