Madhumitha BIke Ride Video

தல அஜித் ஓடிய அதே மாடல் பைக் ஓட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார் மதுமிதா.

Madumitha’s Bike Ride Video : தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வந்தவர் மதுமிதா. அதன் பின்னர் இவர் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஜாங்கிரி மதுமிதா என பெயர் பெற்றார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மன உளைச்சல் காரணமாக தன் கையை அறுத்துக் கொண்டார்.

தல அஜித்தை போலவே ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி மிரள வைத்த மாஸ்டர் மாளவிகா மோகனன் – வைரலாகும் வீடியோ

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து வரும் மதுமிதா இந்த நாட்களையும் வெட்டியாக கழிக்காமல் பைக் மற்றும் கார் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார்.

விசுவாசம் படத்தில் தல அஜித் பல்சர் பைக் ஓட்டுவார். தற்போது மதுமிதாவும் அதேபோல் பல்சர் பைக் ஓட்டி அசத்தியுள்ளார்.

மேலும் இந்த ஊரடங்கில் கார் ஓட்ட கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோக்களை அவர் இணையத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.