பிக்பாஸ் வீட்டில் தன்னிடம் கவின், லாஸ்லியா ஆகியோர் சண்டை போட்ட வீடியோவை மதுமிதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Madhumitha releasing video how others ragging – பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் தற்கொலை முயற்சிக்கு ஆளாகி வெளியேறியவர் மதுமிதா. இவர் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் நடந்த கேலி கிண்டல்கள் தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை மதுமிதா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த வீட்டில் மதுமிதாவோடு போட்ட சண்டையை மறக்க முடியாது என லாஸ்லியா கூறுவதும், அவர் மற்றும் கவின் ஆகியோர் மதுமிதாவுடன் கடுமையாக வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடங்கியுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டு ‘8பேர் எப்படி ragging பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம். இது trailer மட்டுமே. Main picture காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும்’ என மதுமிதா குறிப்பிட்டுள்ளார்.