Moses
பிக்பாஸ் இறுதிப்போட்டி விழாவின் போது தனது புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து விஜய் தொலைக்காட்சி வீடியோ வெளியிட்டுள்ளதாக நடிகை மதுமிதாவின் கணவர் மோசஸ் புகார் கூறியுள்ளார்.

Madhumitha husband blame vijay tv for video – பிக்பாஸ் சீசன் 3 இறுதி நாள் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலோகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முகேன் வெற்றிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன் மற்றும் மதுமிதா தவிர மீதம் 15 பேரும் கலந்து கொண்டனர். அதே நேரம் அந்நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் மோசஸ் கலந்து கொண்டது போல் ஒரு வீடியோவில் காட்டப்பட்டது.

பூஜையுடன் தொடங்கியது தளபதி 64 – வெளியான மாஸ் புகைப்படங்கள்

ஆனால், இதை மோசஸ் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் ‘விஜய் தொலைக்காட்சியின் சீப்பான காரியத்தை பாருங்கள். திட்டம் போட்டு வெளியே அனுப்பினீர்கள். இறுதிப் போட்டிக்கும் கூப்பிட தைரியம் இல்லை. எச்ச வேலை மட்டும் நல்லா பாருங்க. இதை பார்க்கும் மக்களை முட்டாள் என நினைக்கிறீர்களா?.நான் போகல.. இது எப்படி நடந்தது’ என அவர் பதிவிட்டு அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து அந்த காட்சியை கட் செய்து இறுதி போட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவோடு இணைத்து இந்த வீடியோ உருவக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.