நீண்ட நாட்களாக காணாமல் போன மதுமிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குட் நியூஸ் கூறியுள்ளார்.

Madhumita Mosas Preganancy Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் காமெடி நடிகையாக பயணத்தைத் தொடங்கி அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி நடிகையாக வலம் வரத் தொடங்கியதால் மதுமிதா மோசஸ். உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இவ்வளவு நாளாக காணாமல் போன பிக் பாஸ் மதுமிதா.. திடீரென புகைப்படத்தோடு வந்த குட் நியூஸ் - வைரலாகும் போட்டோ

பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு மன உளைச்சலுக்கு ஆளான இவர் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தார். நீண்ட நாட்களாக இவரை பற்றி எந்தவித தகவலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புகைப்படத்தோடு குட் நியூஸ் என்று கூறியுள்ளார்.

இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு மோஸஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார் மதுமிதா. இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இவ்வளவு நாளாக காணாமல் போன பிக் பாஸ் மதுமிதா.. திடீரென புகைப்படத்தோடு வந்த குட் நியூஸ் - வைரலாகும் போட்டோ