அடுத்த படம் குறித்த கேள்விக்கு நடிகர் மாதவன் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு நாயகனாக உலா வந்தவர் நடிகர் மாதவன். இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இப்படமானது இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாதவன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் இருவரும் நடித்திருந்தனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தது.

அடுத்த படம் எப்ப இயக்கப் போறீங்க?? கேள்விக்கு பதில் அளித்த மாதவன்!!.

இந்நிலையில் முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற பெயரை வாங்கிய மாதவனிடம் அடுத்த படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர், “நடிப்பதில் தான் நான் இப்போது ஆர்வம் செலுத்தி வருகிறேன், படம் இயக்குவதில் எனக்கு இப்போது ஆர்வம் இல்லை. நான் ஒரு தற்செயல் இயக்குனர் இன்னொரு படத்தை இயக்க ஆவலாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்”. இவரது இந்த பதில் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.