சூர்யாவை குறித்து மாதவன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு நாயகனாக உலா வந்தவர் நடிகர் மாதவன். இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இப்படமானது இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணரமுடியும்.. மாதவன் வெளியிட்ட உருக்கமான பதிவு.

மேலும் இப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் இருவரும் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணரமுடியும்.. மாதவன் வெளியிட்ட உருக்கமான பதிவு.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம்  மாதவன் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ள மாதவன் தற்போது சூர்யாவை குறித்து உருக்கமான பதிவோடு சேர்த்து சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், மாதவன் சூர்யாவை தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் படுத்தியுள்ளார். 

சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணரமுடியும்.. மாதவன் வெளியிட்ட உருக்கமான பதிவு.

அதற்கு நம்பி நாராயணன், தான் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமாரின் தீவிர ரசிகன் என்று கூறுகிறார். இந்த வீடியோ குறித்த மாதவன் நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர். என் சகோதரர் சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணர முடியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.