Madhavan Review for Soorarai Potru

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்த மாதவன் படம் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Madhavan Review for Soorarai Potru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தை பார்த்து விட்டதாகவும் படம் பற்றிய விமர்சனத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதாவது ரசிகர் ஒருவர் சமூகவலைத்தள பக்கத்தில் சூரரைப்போற்று படத்தை பார்த்து விட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பார்த்துவிட்டேன் mind-blowing என பதிலளித்துள்ளார்.

இரண்டே வார்த்தையில் அதிர வைக்கும் வகையில் மாதவன் கூறிய விமர்சனம் சூரரைப் போற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.