லிங்குசாமி இயக்கத்தில் வில்லன் அவதாரமெடுக்க உள்ளார் பிரபல தமிழ் நடிகர்.

Madhavan As Villian in Lingusamy Movie : தமிழ் சினிமாவின் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் லிங்குசாமி. இப்படங்கள் இருந்து இவர் இயக்கிய சண்டக்கோழி 2 திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தேனியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மாதவனை தேர்வு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் அரன் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த மாதவனுக்கு இந்த வில்லன் அவதாரம் எந்த அளவிற்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.