Madhan Gowri Participate in BB5

பிக் பாஸ் சீசன் 5-ல் யூ ட்யூப் பிரபலம் பங்கேற்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Madhan Gowri Participate in BB5 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் அவருக்கு பதிலாக இந்த சீசனை சிம்பு தொகுத்து வழங்கலாம் என கூறப்பட்டு வருகிறது. மேலும் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்கலாம் என்பது குறித்த லிஸ்ட்டும் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது டிரெண்ட்டிங் யூ டியூப் பிரபலமான மதன் கௌரி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதன் கௌரிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரை யூடியூப்பில் 46 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.