மாயோன் பட டீசர் Contest-ன் வெற்றியாளர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Maayon Teaser Contest Winner : தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் அவர்களின் தயாரிப்பிலும் அவரது திரைக்கதையிலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாயோன். இந்த படத்தில் சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், டத்தோ ராதா ரவி, கே எஸ் ரவிக்குமார் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

எங்கள் குடும்பத்தில், எண்ணிக்கை ஐந்து ஆனது : தினேஷ் கார்த்திக் ‘ஸ்கோர்’

Maayon Teaser Contest-ன் வெற்றியாளர் இவர் தான் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.!

கோவில் சிலைகள் கடத்தப்படுவதும் பின்னர் அந்த கோவிலில் நடக்கும் அமானுஷ்யத்தையும் கதைக் களமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படத்தை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ராம்பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு என பிரத்தியேகமாக தமிழ் டீசர் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. இந்த பிரத்யேக டீசரை வைத்து படக்குழு ஒரு போட்டியை நடத்தியது. அதாவது பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேக டீசரை ரி-க்ரியேட் செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது.

திரும்பவும் அந்த மாதிரி பண்ண முடியுமான்னு தெரியல! – Actor Arya SPeech | Enemy Press Meet

இந்த போட்டியில் பலர் பங்கேற்று இருந்த நிலையில் அமர்நாத் விஜய் என்பவர் வெற்றி பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அமர்நாத் விஜய் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மிகவும் கடினப்பட்டு இந்த டீஸரை ரீ கிரியேட் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே போட்டியில் இரண்டாவது வீரராக கௌசிகா கோபால் என்ற பெண் வென்றுள்ளார். சிறந்த குறளுக்கான தேர்வாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.