இளையராஜா இசை, அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை, என் கிஷோர் இயக்கம் என பலரது கூட்டணியில் வெளியான மாயோன் படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் அருண் மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் அவருக்கு சொந்தமான டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் மாயோன்.

இளையராஜா இசை, அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை, என் இயக்கத்தில் வெளியான மாயோன் எப்படி இருக்கு? முழு விமர்சனம்.!!

கதைக்களம் : தொல்லியல் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலை ஆய்வு செய்ய குழு ஒன்று செல்கிறது. ஆனால் இந்த கோவிலுக்குள் உள்ள ஒரு அறையில் புதையல் இருப்பதாக இந்த குழுவுக்கு தெரிய வருகிறது. அதே சமயம் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்குள் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், இரவில் கோவிலில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப் படுவதாகவும் ஒரு பொது மக்கள் இடையே பரவலாக பேச்சு இருக்கிறது. இப்படியான சூழலில் தொல்லியல் குழு அந்த புதையலை எப்படி மீட்டு கொண்டு வருகிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு இல்லை என்ற கோணத்தில் திரைப்படக்குழு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது.

படத்தை பற்றிய அலசல் :

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே எஸ் ரவிக்குமார் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவர்களது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை படத்தின் மீதான விறுவிறுப்பை கூட்டியுள்ளது. இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஆன்மீகத்தை சார்ந்த ஒரு திரைப்படம் வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இளையராஜா இசை, அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை, என் இயக்கத்தில் வெளியான மாயோன் எப்படி இருக்கு? முழு விமர்சனம்.!!

பாடல்கள் சுமார் ரகம். திகிலூட்டும் அமானுஷ்ய காட்சிகள் ஆங்காங்கே நம்மை அச்சுறுத்துகிறது.

படத்தை நிஜ கோவிலிலும், செட் அமைத்து பாதியும் எடுத்துள்ளனர். ஆனால் இந்த வித்தியாசங்களைக் பெரிய அளவில் தெரியாதது பாராட்ட வேண்டிய ஒன்று.

இளையராஜா இசை, அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை, என் இயக்கத்தில் வெளியான மாயோன் எப்படி இருக்கு? முழு விமர்சனம்.!!

பார்வையற்ற அவர்களுக்காக பிரத்யேக முறையில் ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் கமலா திரையரங்கில் இப்படத்தை ரிலீஸ் செய்ததும் பாராட்ட வேண்டிய ஒன்று.