மாயோன் திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது

Maayon Movie Release Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரது நடிப்பில் டபுள் மீனிங் ஃப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாயோன். இந்த படத்தினை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் படத்தை தயாரித்திருப்பது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

எதிர்பார்ப்பை எகிற வைத்த மாயோன் இந்த தேதியில் வெளியாகிறதா? வெளியான சூப்பர் தகவல்

இசை ஞானி இளையராஜா இசையமைக்க ராம்பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் மிரட்டலாக இருப்பதாக டீசரை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தனர். மேலும் மாயோன் படக்குழு புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்காக பின்னணி குரலுடன் பிரத்தியேக டீஸர் ஒன்றையும் உருவாக்கியது.

இந்த டீசரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாயோன் படக்குழுவினருக்கு பெரும் பாராட்டும் கிடைத்தது. மேலும் படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்காக உயர்த்தியது.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல்

இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்க்க ஆவலோடு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.