மூன்றாவது முறையாக பிரபல நடிகருடன் நேருக்கு நேராக மோத உள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக பிரின்ஸ் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து மாவீரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படமும் இதே தேதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்திக் என இருவரும் இரண்டு முறை நேருக்கு நேராக மோதியுள்ளனர்.

ஆமாம் சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேராக மோதின. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேராக மோதின.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக இவர்களின் மாவீரன், ஜப்பான் திரைப்படங்கள் மோத உள்ள நிலையில் இவற்றில் வெற்றி பெறப்போவது எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.