மாவீரன் படக்குழுவினரின் ரீசன்ட் அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் முக்கியமான ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது கமலஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிவா நடிப்பில் மடோஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டதாக படக்குழு செலப்ரேட் செய்திருந்த போட்டோக்களும் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புது அப்டேட்டாக தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக படக்குழுவினர் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.