மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மண்டேலா திரைப்படத்தை இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளத்துடன் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து கப்பல் செட்டப்பில் உருவாகும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.