மாவீரன் படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்று குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

பரத் சங்கர் இசையமைப்பில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் பல ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் வரை ஒளிபரப்பாக இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கி இருப்பதாக வெளியான அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.