சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் இன்று வெளியாக உள்ளது.

தமிழில் சின்னத்திரை மூலம் தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் அசைக்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான், மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வித்தியாசமான ஜோனரில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருப்பதை படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்திற்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது இன்று மாலை 5 மணிக்கு இப்படம் தொடர்பான புதிய அப்டேட்டை வெளியிட இருப்பதாக லேட்டஸ்ட் தகவலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் புது அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி இதனை வைரலாக்கி வருகின்றனர்.