அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியான மாவீரன் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் “எஸ் கே 21” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் அன்னையர் தினத்தை முன்னிட்டு மாவீரன் படத்தின் படக்குழு இதில் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சரிதா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அப்போஸ்டர் தற்போது வரை ரசிகர்களால் சமூக வலைதள பக்கங்களில் லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.