மாவீரன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் வித்தியாசமான கதைகளைத்துடன் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்திருக்கும் இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்பில் மானிட்டரில் இடம் பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.