
24 மணி நேரத்தில் மாவீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் செய்திருக்கும் சாதனையை படக்குழு பகிர்ந்துள்ளது.
தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நம்ம வீட்டுப் பிள்ளையாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் இவர் பிரண்ட்ஸ் திரைப்படத்தின் வரவேற்பு தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். புதுவிதமான கதைகளத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘சீன்னா சீன்னா’ என்னும் பாடலை படக்குழு நேற்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 5.65 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. பரத் சங்கர் இசையமைப்பில் குத்து பாடலாக வெளியாகி இருக்கும் இப்பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.