மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இந்தப் படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் முதலில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துள்ள இந்த படம் தமிழக அளவில் 7.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

மேலும் இந்திய அளவில் எட்டு கோடிக்கும் அதிகமாக வசூல் என தெரியவந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் சேர்த்து படம் 10 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. இணையத்தில் வெளியான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.