மாவீரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் மண்டேலா திரைப்படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் டப்பிங் பணியை இன்று படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி, வீரமே ஜெயம் என்ற வார்த்தையுடன் சிவகார்த்திகேயன் பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.