
மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான், மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அயலான் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் மாவீரன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இப்படியான நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக படக்குழு சிறப்பு புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.