மாவீரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றி இருக்கும் பிரபல நிறுவனம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறது. மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பரத் சங்கர் இசையமைப்பில் அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்பாடல் தொடர்பான ரீல்ஸ் வீடியோக்கள் இணையதளத்தை ஆக்கிரமித்து வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி இருக்கும் பிரபல நிறுவனம் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.