
மாவீரன் படத்தின் வா வீரா பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. வித்தியாசமான பேண்டஸி கதை காலத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வரும் நிலையில் பரத் சங்கர் இசையில் ஏற்கனவே வெளியான இப்படத்தில் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான “வா வீரா” என்னும் பாடலை நேற்றைய தினம் படக்குழு வெளியிட்டு இருந்தது. தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வரும் இப்பாடல் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.