ரிலீசுக்கு முன்பே அதிகமாக வசூலை செய்துள்ளது மாவீரன் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது பிரின்ஸ் திரைப்படம்.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.

வெகு விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பட்ஜெட் 18 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஆனால் படம் ரிலீஸ்க்கு முன்பாகவே திரையரங்க உரிமை, ஃப்ரீ பிசினஸ் என அனைத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 83 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் ரிலீசுக்கு முன்பாகவே லாபக் கணக்கில் இணைந்துள்ளது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.