இயக்குனர் மாரி செல்வராஜ் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தில் நடித்திருக்கும் வடிவேலு குறித்து பகிர்ந்திருக்கும் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் நடிகர் வடிவேலுவிடம் எதைப் பார்த்து ரசித்து கொண்டாடினேனோ அதனை மாமன்னனின் செய்யவிடவில்லை என்று கூறியிருக்கிறார். இவர் கூறியபடி படத்தில் வடிவேலு காமெடியனாக இல்லாமல் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் போஸ்டர்களிலேயே தெரிகிறது.