வாழை படம் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் 2022-ல் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதில் திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடத்துனர்.
சமீபத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மாரி செல்வராஜ், என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது வாழை. இவனுக்கு பிரச்சனை என்ன என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்த படம் தான் இது. மேலும் வாழை படத்துக்குப் பிறகு நான் என்னுடைய பெஸ்ட் ஆக ஒரு படம் பண்ணாலும் நான் வாழை படத்தை தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சை வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது.