Maari 2 Trailer : ஒரே நாளில் மாரி 2 படத்தின் ட்ரைலர் மிக பெரிய சாதனையை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் என பலர் இணைந்து நடித்துள்ள படம் மாரி 2.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்தையும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.
டிசம்பர் 21-ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது வரை இப்படத்தின் ட்ரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதுவும் ஒரே நாளில் இப்படியான சாதனையை படைத்திருப்பது தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
By the grace of existence ???????????? Thank u all! #Maari2Trailer #Maari2fromDec21 #Maari2 pic.twitter.com/iXSwpZcJAk
— Balaji Mohan (@directormbalaji) December 6, 2018