Maari-2 Trailer Review

Maari 2 Trailer Review : தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டேவினோ தாமஸ், ரோபோ ஷங்கர் என பலர் இணைந்து நடித்துள்ள படம் மாரி 2.

வரும் டிசம்பர் 21-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது, இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ட்ரைலரின் ஆரம்பமே சாவுக்கு பயப்படாதவனை சாவடிக்கறது ரொம்ப கஷ்டம் என டேவினோ தாமஸின் வாய்ஸ் ஒலிக்கிறது.

அடுத்த சீனில் ஒரு போலீசார் 8 வருஷமா தேடியும் மாரியை கிடைக்கல மேடம் என வரலட்சுமி சரத்குமாரிடம் கூற அதற்கு வரு நீங்க திரும்பவும் அந்த கேஸை ஓபன் பண்ணுங்க என கூறுகிறார்.

மீண்டும் டேவினோ தாமஸ் மாரியை சாதாரணமாக கொள்ள முடியாது என கூற தனுஷ் செம மாஸாக கொட்டும் மழையில் என்ட்ரி கொடுக்கிறார்.

அப்படியே கொஞ்சம் பைட், காமெடிய என கலகலப்பாக போக சாய் பல்லவி என்ட்ரி செம கியூட்டாக அமைந்துள்ளது.

அப்போது ரோபோ ஷங்கர் ஏரியா புல்லாவும் டார்ச்சர் கொடுக்கறது நம்ம மாரி-னா மாரிக்கே டார்ச்சர் கொடுக்கறது இந்த அராத்து ஆனந்தி என கூறுகிறார்.

தனுஷுக்கும் சாய் பல்லவிக்கு படத்தில் திருமணம் ஆகி விடும் என்பதை உறுதி செய்யும் விதமாக ஒரு காட்சி.

அதில் தனுஷ் இது அனாமத்தா போக வேண்டிய உசுரு டி என கூற என் உசுராச்சே போங்க விட்டுடுவேனா என கூற சாய் பல்லவி ஸ்கோர் செய்கிறார்.

மீண்டும் டேவினோ தாமஸ் சாவுக்கு கடவுள் நான் ஆனால் சாவடிக்கவே முடியாதவன் மாரி என மீண்டும் டேவினோ தாமஸின் காட்சி இடம் பெறுகிறது.

டேவினோ தாமஸும் இந்த படத்தில் தனுஷை புகழ்ந்து பேசுவது நமக்கு விவேகம் படத்தை நினைவிற்கு கொண்டு வருகிறது. ஆனால் படத்தில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Im a bad boy என டேவினோ கூற தனுஷ் if u bad im ur dad என ஒரு பன்ச் டைலாக்கை கூறியுள்ளார். அந்த டைலாக் பெரியதாக அந்த இடத்திற்கு பொருந்தாது போல தெரிகிறது.

மொத்தத்தில் மாரி 2 தனுஷ் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.