Rowdy baby Song From maari 2

Maari 2 Single Track : தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் மாரி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாரி 2 படம் உருவாகியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட படத்திற்கு தணிக்கையில் U/A சான்றிதழ் கிடைத்திருந்ததை அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்காக ரவுடி பேபி என்ற பாடல் வெளியாகியுள்ளது

யுவன் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எப்படியான வரவேற்பை பெறுகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

மாறி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.