Rowdy Baby
Rowdy Baby

Rowdy Baby : தமிழ் சினிமாவையும் பாடல்களையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று ஒரு பாடலின் ஆயுற்காலம் சுருங்கிவிட்டது.

என கூறினாலும் அதே தொழில்நுட்பத்தால் இன்று ஒரு பாடலின் வீச்சு எல்லைகள் கடந்து கொண்டாடப்படுவதும் எவராலும் மறுக்க முடியாது.

ஒய் திஸ் கொலவெறி, ரிங்க ரிங்கா, ஜிமிக்கி கம்மல் என நீளும் இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் பாடல் ரௌடி பேபி.

தனுஷின் வசீகரிக்கும் குரல், குழந்தைகளையும் முணுமுணுக்க வைக்கும் வரிகள், யுவனின் துள்ளலான இசை,

பிரபுதேவாவின் வித்தியாசமான நடன அமைப்பு, இவை அனைத்தையும் மிஞ்சிய சாய் பல்லவியின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அசைவுகள் என நான்கரை நிமிடத்தில் ’ரௌடி பேபி’ திரையில் ஒரு விஷுவல் விருந்து படைத்தது.

இதன் விளைவாக தற்போது இந்த பாடல் யு டியூபில் 40 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு தமிழக அளவில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மேலும் இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல்களில் டாப் 25 இடத்திற்குள்ளும் இப்பாடல் நுழைந்துள்ளது.