
Maari 2 Movie Review – வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ், சாய் பல்லவி, டெவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் மாரி2.
கதைக்களம் :
கொடூர வில்லனாக நடித்துள்ள டெவினோ தாமஸ் மாரியையோ அவரை சுற்றியுள்ளவர்களையோ கொலை செய்து அதில் ஆனந்தம் காண வேண்டும் என எண்ணுகிறார்.
இவரிடம் இருந்து மாரி தனுஷ் தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் எப்படி காப்பாற்றி கொள்கிறார்? இறுதியில் வில்லனின் நிலை என்ன என்பது தான் இப்படத்தின் கதையும் களமும்.

தனுஷ் : மாரி படத்தின் முதல் பகுதியை விட தனுஷ் இந்த இரண்டாம் பாகத்தில் தன்னுடைய நடிப்பை வேற லெவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
லவ், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் மிரட்டி தெறிக்க விட்டுள்ளார்.
டெவினோ தாமஸ் :
மலையாள சினிமாவின் பிரபல நடிகரான டெவினோ தாமஸ் இந்த படத்தில் கொடூரமான வில்லனாக தன்னுடைய நடிப்பை பதிவு செய்துள்ளார்.
மாஸான ஹீரோவுக்கு ஏற்ற மிரட்டலான வில்லனாக காலக்கியுள்ளார்.
சாய் பல்லவி :
சாய் பல்லவி இபடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாகத்தில் நடித்திருந்த காஜலை விட பல மடங்கு சிறப்பாக நடித்துள்ளார்.
கிருஷ்ணா :
தனுஷின் நண்பனான கிருஷ்ணா நடித்துள்ளார். ஆரம்பத்தில் நண்பனாக இருந்த கிருஷ்ணாவின் தம்பியை டெவினோ கொன்று அந்த பழியை தனுஷ் மீது சுமத்தி விடுவதால் கிருஷ்ணாவும் வில்லனாக மாறி விடுகிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் :
ரோபோ ஷங்கர், வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோர் அவர்களது நடிப்பை சூப்பராகவே வெளிப்படுத்தியுள்ளனர்.
இசை :
யுவன் ஷங்கர் ராஜா இசை வேற லெவல். படத்தின் பின்னணி இசை, பாடல்கள் ஆகியவையும் சூப்பராக அமைந்துள்ளன.
ஒளிப்பதிவு :
ஓம் பிரகாஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்ய ஜி.கே பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார். இருவருமே அவர்களின் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம் :
பாலாஜி மோகன் கதையை அழகாக கோர்வையாக அமைத்து கொடுத்துள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் அதிகமாகவே மாஸ் கொடுத்துள்ளார்.
ரோபோ ஷங்கர் ஆகியோரின் கமெடிகளை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.
தம்ப்ஸ் அப் :
1. தனுஷ், சாய் பல்லவி, டெவினோ தாமஸ் நடிப்பு
2. சண்டை காட்சிகள்
3. யுவனின் இசை
4. என்ன தான் ரவுடியாக இருந்தாலும் குடும்பத்திற்காகவும் மாகனுக்காகவும் அனைத்தையும் விட்டு நல்ல மனிதராக மாறுவது.
தம்ப்ஸ் டவுன் :
1. ரோபோ ஷங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோரின் காமெடி காட்சிகளை அதிகரித்து இருக்கலாம்.