Maar 2 Collection

Maari 2 Collection : தனுஷின் மாரி 2 படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி பாக்ஸை ஆபீசை அதிர வைத்து வருகிறது.

படம் ரிலீசாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இது வரையிலான வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகராவால், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மாரி.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முன்னர் அதாவது கடந்த டிசம்பர் 21-ம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வந்திருந்தது.

தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் சாய் பல்லவி நடிக்க டெவினோ தாமஸ் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

முதல் பாகத்தை போலவே இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 4 நாளில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 14 கோடி வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.