மாறன் திரைப்படம் எப்படி இருக்கு என்பது பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
Maaran Movie Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாறன். டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க ராம்கி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம் :
நேர்மையான பத்திரிக்கையாளரான ராம்கி ஒரு அரசியல்வாதியால் 40 குழந்தைகள் உயிரிழந்த கதையைப் பற்றி பத்திரிக்கையில் வெளியிட அதனால் அவர் கொல்லப்படுகிறார். ஏற்கனவே மாறன் என்ற மகன் இவருக்கு இருந்த நிலையில் இவருடைய மனைவி இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து பிரசவத்தில் இறந்து போகிறார். அதன் பின்னர் மாறனான தனுஷ் தன்னுடைய தங்கைக்கு அப்பாவும் அம்மாவுமாக இருந்து வளர்க்கிறார்.
தன்னுடைய அப்பாவை போலவே தனுஷின் நேர்மையான பத்திரிக்கையாளராக இருக்கிறார். இவருக்கும் அரசியல்வாதியான சமுத்திரக்கனிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தைப் பற்றிய அலசல் :
தனுஷ் வழக்கம் போல இந்த படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். ஆனால் மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தின் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை.
மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தைப் போல இந்த படத்திலும் ஒரு சப்போர்ட்டிங் ரோல் போலவே வருகிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. தனுஷுக்கு தூண்டுதலாக இருக்கிறார்.
ஆடுகளம் நரேன் படம் முழுவதும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
வில்லனாக வரும் சமுத்திரகனி பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. அவருடைய கதாபாத்திரத்தை அழகாக நடித்து கொடுத்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் ரசிக்கும் வகையில் உள்ளது.
கதையில் பெரிய அளவில் அழுத்தம் இல்லை. கார்த்திக் நரேன் இதுவரை இயக்கிய படங்களை ஒப்பிடும்போது மாறன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவு தான்.
தம்ப்ஸ் அப் :
1. தனுஷின் நடிப்பு
2. ஜிவி பிரகாஷின் இசை
3. அண்ணன் தங்கை சென்டிமென்ட்
தம்ப்ஸ் டவுன் :
1. விறுவிறுப்பு குறைவு
2. சுவாரசியமில்லாத ட்விஸ்ட்