தமிழகத்தில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நேரடியாக ஹாட் ஸ்டாரில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

Maaran Movie Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியை தள்ளி வைத்து வருகின்றனர்.

கண்டிப்பா பிரச்சனை பண்ணுவோம் – Valimai Postponed Fans Reaction | Thala Ajith | H.Vinoth | Yuvan

ரயிலில் பயணிக்க, 2 டோஸ் தடுப்பூசிச் சான்று கட்டாயம் : அதிரடி அறிவிப்பு

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.