தல அஜித்தின் வலிமை படத்துடன் தனுஷின் மாறன் திரைப்படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maaran Movie Release Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முருகப்பெருமானின் ஏழாம்படை வீடு.!

தல அஜித்தின் வலிமையுடன் மோதும் தனுஷின் திரைப்படம் - வெளியான அதிரடி தகவல்.!!

படத்தில் ஹூமா குரோஷி, யோகி பாபு உள்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்துடன் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் திரைப்படம் மோதும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர் உள்ளவரை அவருக்கு நான் அடிமை! – Actor Bonda mani Speech

கடந்த சில தினங்களாக அஜித் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே மோதல் போக்கை உருவாக்கி வரும் நிலையில் இருவரில் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.