Maaran First Single Record in 24 Hours

வெளியான தாயகத்தில் நம்பர் ஒன் சாதனை படைத்துள்ளது மாறன் படத்தில் பொல்லாத உலகம் பாடல் வீடியோ.

Maaran First Single Record in 24 Hours : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாட்ஸ்டார் விஐபி வழியாக பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் ஆக பொல்லாத உலகம் என்ற பாடல் வீடியோ வெளியானது. வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக 7.8 மில்லியன் பார்வையாளர்கள் உடன் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சின்ன வயசுல இருந்தே Anirudh இப்படிதான் – அனிருத்தின் தந்தை பெருமிதம்! | HD

கடத்தப்பட்ட சிறுவன், பெற்றோரிடம் ஒப்படைப்பு : மத்திய அரசு தகவல்

இதனை ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. தனுசு பாடல்கள் எப்போதும் பெரும் சாதனை படைத்து வரும் நிலையில் இந்த பாடலும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.