மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Maanadu Single Track Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

2 மாதத்தில், கொரோனா 3-வது அலை : எய்ம்ஸ் தலைவர் தகவல்

வெளியானது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் - தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க யோகி பாபு, எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாகவும் அறிவிக்கப்பட்டது‌. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி சிங்கிள் ட்ராக் டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. முழு பாடல் ஜூன் 21-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.