கடைசி நேரத்தில் மாநாடு படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Maanadu Release Confirmed : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு படத்தை இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

கடைசி நேரத்தில் உறுதியான மாநாடு ரிலீஸ்.. செங்கல்பட்டு ஏரியாவில் படத்தை வெளியிடுவது யார் தெரியுமா??

படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து இந்த படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை படம் ரிலீஸ் என ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடைசி நேரத்தில் உறுதியான மாநாடு ரிலீஸ்.. செங்கல்பட்டு ஏரியாவில் படத்தை வெளியிடுவது யார் தெரியுமா??

இந்த நிலையில் தற்போது படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செங்கல்பட்டு ஏரியாவில் இந்த படத்தினை கலைமகன் முபாரக் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. அவர்களும் நாளை மாநாடு திரைப்படம் வெளியாவது உறுதி என பதிவு செய்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளனர்.

ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் முகேன் ராவ் நடிப்பில் வேலன் மற்றும் ஜிவி பிரகாஷ் நடித்த இடிமுழக்கம் ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.